மாவீரர் நாளுக்கு தடை - நீதிமன்ற போலி கட்டளைப் பிரசுரம் வெளியீடு



கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு எதிராக அதற்கு தடை விதிக்குமாறு கோரி கோப்பாய் பொலிசார் யாழ் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் நீதிமன்றக் கட்டளை எனும் பெயரில் போலி பிரசுரம் ஒன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவவிடப்பட்டுள்ளது

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றி அங்குள்ள மாவீரர் கல்லறைகளை இடித்தழித்து அதன்மேல் இராணுவ முகம் அமைத்துள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக கடந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அதனை பொறுப்பேற்று மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதற்கு தடை விதிக்குமாறு கோரி கோப்பாய் பொலிசாரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.  குறித்த மனுமீதான கட்டளை நாளை மறுதினம் 23 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிவான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு என பெயர் குறிப்பிட்டு நீதவான் கட்டளை பிறப்பித்ததாக பாரிய எழுத்துப்பிழைகளுடன் கூடிய கைஒப்பம் ஏதும் இல்லாத போலி துண்டுப்பிரசுரம் ஒன்று சமூக வலைத்தளங்களின் ஊடாக சில விசமிகளால் பரவவிடப்பட்டுள்ளது.

No comments