சிறிலங்கா தன் இறைமையை சீனாவிடம் இழந்துவிட்டது - அமெரிக்கா கவலை


சீனாவுடனான உடன்பாட்டின் விளைவாக, சிறிலங்கா தனது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டது என, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக, சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டையே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைதிக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவகத்தில், உரையாற்றி அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ்,

“சீனாவின் கடனைப் பயன்படுத்திய சில நாடுகள், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கவலையடைந்துள்ளன.

சிறிலங்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள்,  அவர்கள் தமது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டனர்.

இது போன்ற பிரச்சினைகள் குறித்தும் வொசிங்டனில் விரைவில், சீன பாதுகாப்பு அமைச்சருடன் நடத்தவுள்ள சந்திப்பின் போது வெளிப்படையாகப்  பேசுவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments