பிரான்சில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
பொதுச்சுடரினை  லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி நேசராசா சிவகுமாரி அவர்கள் ஏற்றிவைத்தர். ஈகைச்சுடரினை, பிரிகேடியார் தமிழ்ச் செல்வனின் துணைவியார் ஏற்றி மலர்மாலையை அணிவித்தார். கேணல் பரிதியின் நினைவுச் சின்னத்திற்கு அவரது புதல்வி மலர்மாலை அணிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.

லாக்கூர்நெவ் நகரசபை உறுப்பினர் திரு. Couteau-Russel  >  பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Marie-George Buffet , தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழ் உணர்வாளர் திரு ஜெயப்பிரகாசம் மற்றும் தமிழர் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினர்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரம் முழங்க நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

No comments