பதிலளிக்க முடியாதிருந்த சித்தரும்,சுரேஸ் தரப்பும்!

அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை புறக்கணிப்பது தொடர்பில் தனித்து தனது முடிவை வெளிப்படுத்த முடியாதென புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் மட்டுமே எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் முன்வைக்கவேண்டுமென்ற உத்தரவாதங்களை வெளிப்படுத்த வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோர முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அவர் தனித்து முடிவை அறிவிக்க முடியாதென தெரிவித்ததுடன் ஏனைய தரப்புக்களும் கூட்டமைப்பு தலைமையிடமும் இது தொடர்பில் வலியுறுத்தி தானும் பேசப்போவதாக தெரிவித்தார்.

இதனிடையே கூட்டத்தில் கலந்து கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரன் பதில் ஏதனையும் வழங்கியிருக்கவில்லை.

கடந்த வரவு செலவு திட்டத்தின் போது ஈபிஆர்எல்எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவளித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடைபயணத்திலீடுபட்டுள்ள மாணவர்களின்  கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அரசியல் கைதிகளின் போராட்டம் வெற்றிபெறவேண்டுமென அனைத்து தரப்புக்களும் வலியுறுத்தியிருந்தன.

No comments