பிரித்தானியாவில் நினைவுகூரப்பட்ட முதல் பெண் மாவீரர் லெப்.மாலதி

தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள். நேற்று (21/10/18) பிரித்தானியாவில் WATFORD பகுதியில் நடைபெற்றது

இன் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வட்போட் செயற்பாட்டாளர் செல்வசுந்தரம் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைக்க. அதனைத்தொடர்ந்து வடமேற்கு பிராந்தியத்தின் நிதிப் பொறுப்பாளர் யோகா ஈகைச் சுடரினை ஏற்றினார்.

அதனைத்தொடர்ந்து கப்டன் உதயதீபனின் அண்ணன் ஈசன் மலர்மலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து கவிதைகள் சாமினி ராஜநாதன் ,தமிழ் உதயா ஆகியோரின் கவிதைகளைத் தொடர்ந்து ஈழப் பாடல்களை கதிர்வேல் மகேந்திரன் , சுரேஸ் சுப்பிரமணியம் ஆகியோரின் ஈழ பாடல்களை தொடர்ந்து கொடி கையேந்தலுடன்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments