மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்பு!



நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார். மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதியேற்றபோது அங்கு நல்லாட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

No comments