ஐ.தே.கவிலிருந்து இன்று கட்சிதாவுபவர்களுக்கும் அமைச்சுப் பதவி


ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் சில அமைச்சர்கள் இன்று அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இன்று மாலை இதற்கான நிகழ்வு இடம்பெறும் என அரசாங்க ​பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த, சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, நேற்று முன்தினம் விஜேதாச ராஜபக்ஸ, ஆனந்த அளுத்கமகே, வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதற்கிணங்க, இதுவரை ஐக்கிய ​தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஐவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

No comments