மீண்டும் மொட்டை கடிதங்கள்: புறந்தள்ளுகின்றது பேரவை!


பெரும்பரபரப்புடன் வடமாகாண முதலமைச்சரின் உரையினை அனைத்து தரப்புக்களும் எதிர்பார்த்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து உளவியல் யுத்தமொன்றை இலங்கை புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு அங்கமாக புலிகளின் இலட்சியினையுடன் மொட்டைக்கடிதங்கள் தாறுமாறாக பறக்கத்தொடங்கியுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலங்கள் பலவற்றிற்கும் எதிர்வரும் 24ம் திகதிய தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் அணி திரளக்கோரி குறித்த மொட்டைக்கடிதங்கள் பறந்துள்ளது.

இதனிடையே குறித்த மொட்டைகடிதம் தொடர்பில் அலட்டிக்கொள்ளதேவையில்லையென தமிழ் மக்கள் பேரவை தரப்புக்கள் தெரிவித்தன.

அச்சமூட்டி விலகியிருக்கவைக்கின்ற உத்தியானது முன்னைய எழுக தமிழின் போது இதே தரப்புக்கள் கடைப்பிடித்தன.அதனை நாங்களும் கண்டுகொள்ளவில்லை.மக்களும் அதனை கண்டுகொள்ளவுமில்லையென அத்தரப்புக்கள் மேலும் தெரிவித்தன.

No comments