நீங்கள் வேறு நாடு! நாங்கள் வேறு நாடு - அம்பலமாகும் சிங்கள இனவாத முகம்



அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடை பயணமாக அநுராபுரம் சிறைச்சாலையை அடைந்தபோது, சிங்கள இளைஞர்கள் நடந்து கொண்ட விதம், மற்றும் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் சிங்களவர்கள் எங்கள்மீது நிகழ்த்திய இன அழிப்பு வன்முறைகளைதான் நினைவுபடுத்துகின்றன என மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த வவுனியா ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்,

அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

சிங்களவர்கள் ஒரு சகோதர இனமாக தமிழர் இளைஞர்களை கருதியிருந்தால், எங்கள் வலியும் வேண்டுகையும் அவர்களுக்குப் புரிந்திருக்கும். எங்களை சக இனமாகவென்ன மனிதர்களாககூட கருததாக இனவாதம் சிங்கள இளைஞர்களிடம் இன்றும் இருக்கிறது என்றால், இன நல்லிணக்கம் என்பது எவ்வளவு மோசமான ஏமாற்று வித்தையாக இருக்கும்.

சிங்கள இனம், ஒருபோதும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது. ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் வேறு நாடு நாடு, நாங்கள் வேறு நாடு என்பதை அவர்கள்தான் திரும்பத் திரும்ப உணர்த்துகிறார்கள்.

மாணவர்களின் அமைதியான நடைபயணமும் காடைத்தனமான சிங்கள இளைஞர்களின் இனமேலாதிக்க திமிரின் மத்தியில் அமைதியான எடுத்துரைப்பும் எங்கள் ஜனநாயக முகங்கள். இதை புரிந்துகொள்ளாமல் எம்மை பயங்கரவாதிகளாக சித்திரிப்பதன் மூலம், மெய்யாக தங்களே கொடூரமான பயங்கரவாதிகள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள்.

No comments