சிங்கள அமைச்சருக்கு சாராயம் கொடுத்த சரவணபவன்



அண்மையில் சிங்கள அமைச்சர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அமைச்சருக்கு மதுபான விருந்து ஒன்றை நடத்தியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சிங்கள அமைச்சருக்கு மதுபானம் கொடுத்தமை தவறு என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒருதடவை பிரதமரை எனது வீட்டுக்கு அழைத்து நுங்கு கொடுத்தமை ஒரு விருந்துபசாரம் ஆகும். ஆனால் மதுபானங்கள் கொடுத்து விருந்து வைத்தமை எனக்கு சங்கடமாக இருந்தது என சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கூட்டம் ஒன்றில் குறித்த விடயம் விவாதத்திற்கு வந்தபோதே இதனை சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி மதுபாவனைக்கு எதிரான கட்சி ஆகும். எனவே இது சரியல்ல. இனிமேல் இப்படி செய்யவேண்டாம் என மாவை சேனாதிராசாவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் இவ்விடயத்தை வெளிக்கொண்டுவந்தவரை சிஐடியிடம் முறையிட்டு கடும் நடவடிக்கை தன்னால் எடுக்கமுடிம் என சரவணபவன் எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments