ரணில் இந்தியாவிற்கு மைத்திரி சீனாவிற்கு


சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக, தனிப்பட்ட பயணமாகவே அவர் இந்தியா செல்லவுள்ளார் என்று கூறப்படுகின்ற போதிலும், இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, இந்தவாரம் போலந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்து கொழும்பு திரும்பிய பின்னர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர் சீனாவுக்குப் பயணமாவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் எதிர்வரும் நொவம்பர் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்ட உரையின் போது அவர் நாடாளுமன்றத்துக்கு வர முடியாத நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments