அரசியல் கைதிகளது போராட்டத்தை குழப்ப சதி?


அரசியல் கைதிகளது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது நடைபயண பேரணி கிளிநொச்சியை இன்று சென்றடைந்துள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதிகளிடையே குழப்பங்களையேற்படுத்த சில அரசியல் தரப்புக்கள் மும்மரமாக செயற்பட்டுவருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளது.

அரசியல் கைதிகள் எவருமேயில்லையென அரசு ஒருபுறம் வக்காலத்து வாங்கிவருகின்ற நிலையில் ஜனாதிபதி முதல் பிரதமர் ஈறாக கைவிரித்துவிட்ட நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதியுடன் சந்தித்து முடிவை காணப்போவதாக தெரிவித்திருந்த இரா.சம்பந்தன் முதல் எம்.ஏ.சுமந்திரன் ஈறாக தற்போது மௌனம் காத்தேவருகின்றனர்.

இந்நிலையில் மறுபுறம் அனுராதபுரம் சிறையில் போராட்டத்திலீடுபட்டுள்ள கைதிகளிற்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்துள்ள மகசீன் சிறைச்சாலை கைதிகளினது போராட்டத்தை குழப்பியடிக்க இத்தரப்புக்கள் முனபை;பு காட்டிவருகின்றன.

இதன் மூலம் போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகளிடையே பிளவினை தோற்றுவிக்க சில அரசியல் தரப்புக்கள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது,

எனினும் தமது கோரிக்கை தொடர்பில் அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள தாயாராக இல்லையென தமது குடும்பத்தவர்கள் மூலம் அரசியல் கைதிகள் ஊடகங்களிற்கு இன்றிரவு அறிவித்துள்ளனர். 

No comments