பொலிஸ்மா அதிபருடன் மகிந்த ஆலோசனை


சிறிலங்கா பிரதமராக நேற்றுமாலை மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன், நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார்.

மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு நள்ளிரவுக்கு சற்று முன்னதாக சென்ற காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மகிந்த ராஜபக்சவுடன் கோத்தாபய ராஜபக்சவும் இருந்துள்ளார்.

அதேவேளை, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபரும், நேற்று நள்ளிரவு சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளார்.

இதேவேளை இராணுவம் மற்றும் பொலிசார் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments