அடுத்த சுற்றுலா வவுனியாவிற்காம்?


வடமாகாணசபையின் நில ஆக்கிரமிப்பிற்கான போராட்டங்கள் வெறுமனே புகைப்படம்பிடிக்கவும் செய்தி அறிக்கையிடவுமேயென்ற விமர்சனங்கள் மத்தியில் அடுத்து சுற்றுலாவிற்கு உறுப்பனர்கள் தயாராகியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதுக்காக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (09) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வனலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஐயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து கால நேரத்தை பின்னர் அறிவிப்பதாக அன்றையதினமே அவைத் தலைவர் சபையில் தெரிவித்திருந்தார். இந் நிலையில் இந்த விடயம் அவைத் தலைவரிடம் வினவியபோது போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments