சுகாதார அமைச்சரை பதவி விலக குருகுலராஜா வலியுறுத்தல்


வடக்கு மாகாண சபையின் அமைச்சர் ஒருவருக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பது உயரிய சபைக்கு அவமானம். ஆகவே அமைச்சர் என்பதால் தானாகவே அவர் பதவியிலிருந்து விலகிச் செல்ல வேண்டுமென முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது அமைச்சர் குணசீலனின்; வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் மாவட்டத்தில் முக்கு கண்ணாடி வழங்கில் பாரிய முறைகேடு இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் போது கருத்து வெளியிடுகையிலையே முன்னாள் அமைச்சர் குருகுலராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயரிய சபையான மாகாண சபையின் அமைச்சர் ஒருவர் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதானது சபைக்கும் எங்களுக்கும் அவமானம் என்று கூறினார். ஆவ்வாறு தான் கூறப்படுகிறது எனப் பதிலளித்துக் கொண்டு தனுதுரையை ஆரம்பித்த குருகுலராசா மாகாண சபையில் ஒருவர் முறைகேடு அல்லது மோசடி செய்துள்ளார் என்றால் அதனை ஏன் மூடி மறைக்க வேண்டும். அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சபையின் இறுதி நேரத்தில் வருகின்றமை எல்லோரையும் அப்பிடியானவர்களாகவே காட்டுவதாக அமையும். ஆகவே அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் யாராயினும் பகிரங்கப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதே வேளை நாங்கள் அதிகார துஸ்பிரயோகம் செய்தோம் என்று கூறி பதவி நீக்கப்பட்டோம். ஆகையினால். அமைச்சர் என்ற வகையில் தானாகவே பதவியிலிருந்து அவர் விலகிச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதன் போது குறுக்கிட்ட அவைத் தலைவர் அமைச்சராக குணசீலன் பதவியில் இருக்கிறராரா என்ற கேள்வியைக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments