தொழிலாளர் சம்பளத்தை 1000 ஆக்காதுவிடின் அரசுக்கான ஆதரவை வாபஸ்பெறுவோம்


“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு தலையிட்டு, ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத் தராவிட்டால், அரசுக்கு நாம் வழங்கும் ஆதரவை வாபஸ்பெறுவது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டி வரும்.”

– இவ்வாறு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சட்டச் சிக்கல் உள்ளதால் கூட்டு ஒப்பந்த விடயத்தில் எம்மால் தலையிட முடியாது. இதற்கு எம்மை அழைப்பதும் இல்லை. அதனால்தான் போரராட்டங்களில் குதிக்கின்றோம். சம்பளப் பிரச்சினையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து விலகினால் இந்தக் கூட்டு ஒப்பந்த விடயத்தில் என்னால் தலையிட முடியும” – என்றார்.

No comments