சீன பயணத்தை ஒத்திவைத்தார் மைத்திரி


சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று,  மைத்திரிபால சிறிசேன பீஜிங்கிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

நவம்பர் 2ஆம் நாள் அவர் பீஜிங் புறப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

எனினும் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை அடுத்து, அவர் இந்தப் பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments