மகிந்த அணிக்கு தாவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டு அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஆனந்த அளுத்கமகே, சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேயின் நெருங்கிய உறவினரான இவர்,  ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஐதேகவைச் சேர்ந்த பலர் மகிந்தவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டு அரசாங்கத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த வசந்த சேனநாயக்கவும், மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, ஐதேகவைச் சேர்ந்தவர்கள் கட்சி தாவப் போவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா மறுத்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் மகிந்த- மைத்திரி கூட்டு அரசாங்கத்தில் இணையவுள்ளதாக ஊகங்கள் பரவியுள்ளன.

எனினும், அந்தச் செய்திகளில் உண்மையில்லை என்று ஐதேக அமைச்சர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

No comments