எழுத்து மூல ஒப்பந்தமே தேவை!


மஹிந்த அரசிற்கு ஆதரவளிப்பதானால் சர்வதேச சமூகத்தின் பங்கெடுப்பு அல்லது சாட்சியத்துடனான எழுத்து மூல உறுதியளிப்பு கிடைத்தால் மாத்திரமே ஆதரவு என்ற முடிவுக்கு கூட்டமைப்பினர் வரவேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதனிடையே நேற்று நடைபெற்ற மஹிந்த அரசிற்கு ஆதரவளிப்பது தொடர்பிலான பஸில் - சம்பந்தர் சந்திப்பின் போது கூட்டமைப்பின் எழுத்து மூல ஒப்பந்த கோரிக்கையினை பஸில் ராஜபக்ஸ நிராகரித்திருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக மைத்திரி-ரணில் தரப்புடன் எழுத்து மூல ஒப்பந்தம் எதனையும் செய்யாது ஆதரவளித்திருந்த நிலையில் தம்மோடு எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்வது பொருத்தமற்றதென பஸில் தெரிவித்துள்ளாராம்.

இதேவேளை பஸிலுடன் நடைபெற்ற சந்திப்பு வெற்றி பெறாததை தொடர்ந்து மீண்டும் மகிந்தவுடன் சந்திப்பு நடந்திருக்கிறது.அங்கும் கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லையென தெரியவருகின்றது.

எனினும் இவ்வாறான எழுத்து மூல கோரிக்கை தொடர்பில் மஹிந்த தரப்பு சம்மதிக்காது என்பதனை புரிந்தே இத்தகைய நகர்வு முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும் இனிவருங்காலங்களில் தெற்கு ஆட்சியாளர்களிற்கு ஆதரவளிப்பதானால் சர்வதேச சமூகத்தின் பங்கெடுப்பு அல்லது சாட்சியத்துடனான எழுத்து மூல உறுதியளிப்பு கிடைத்தால் மாத்திரமே ஆதரவு என்ற முடிவுக்கு கூட்டமைப்பினர் வரவேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments