கேபிக்கும் கோத்தாவே பாதுகாப்பு:சம்பிக்க குற்றச்சாட்டு!


மே19 இன் பின்னராக ராம் மற்றும் நகுலன் ஆகியோருக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் சம்பளம் வழங்கப்பட்டதாக, அரச அமைச்சரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவிய போது, புலிகள் இயக்கத் தலைவர்கள், கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளைத் தனக்கு சேகரித்துக் கொடுப்பதாகக் கூறியிருந்த நிலையிலேயே இந்தப் பணம் வழங்கப்படுவதாக பதிலளித்தாரென்றும், சம்பிக்க கூறியுள்ளார்.

ராம் மற்றும் நகுலன் போன்ற புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு, கோட்டாபய ராஜபக்ஸவினால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன், ராம், நகுலன் போன்றோர், மொனராகலை மற்றும் கதிர்காமத்தில், நூற்றுக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்தவர்கள் என்றும் அவ்வாறானவர்கள் இன்றும் உயிரோடு உள்ள நிலையில், ராஜபக்ஸ குடும்பத்தினரால், அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளிற்கு மைத்திரி –ரணில் அரசு உதவிகளை வழங்கிவருவது தொடர்பில் மஹிந்த தரப்பும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அமைச்சரான சம்பிக்க ரணவக்க கோத்தா மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

No comments