யாருக்கும் ஆதரவு இல்லை என்கிறது ஜே.வி.பி


அரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் மூலம் பிரதமர் பதவியை யார் வகிப்பது என்று முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபிக்கு 6 ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments