கொலைச்சதியில் கைதான இந்தியருக்கு உயிர் அச்சுறுத்தலாம் !


குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, இந்தியரான மெர்சலின் தோமஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்தியரான, மெர்சலின் தோமஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று  கோட்டு நீதிவான் நீதிமன்றத்தில் சிறப்பு வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.

அப்போது அவர்,குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அவரை, எழுத்துமூலம் முறைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.

அதேவேளை, இன்றைய விசாரணைகளின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படுத்திய நாமல் குமார மற்றும் பயங்கிரவாத விசாரணைப்பிரிவின் மன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வா ஆகியோரின் குரல் சோதனை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர்.

நாலக சில்வாவுக்கும், நாமல் குமாரவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்த 124 ஒலிப்பதிவுகளில், 123 ஒலிப்பதிவுகள், அவர்களின் குரல் பதிவுகளுடன் ஒத்துப் போவதாக, கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.No comments