மறவன்புலோவிடம் பயங்கரவாத பிரிவு விசாரணை!

கொழும்பு இரண்டாம் மாடிக்கு விசாணைக்கு வரச்சொன்ன வரச் சொன்ன பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தன்னை யாழ்ப்பாணத்தில் சந்தித்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

கொழும்வு வருவது தொடர்பிலான எனது இயலாமையை அவர்களுக்குக் கடிதம் வழி தெரிவித்தேன் . அதனையடுத்து இன்று 11ம் திகதி வியாழன் காலை  யாழ்ப்பாணம் நான்காம் குறுக்குத் தெருவில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் எனது வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கருணாதிலக்க என்பவர் தன்னிடம் தகவல்கள் பெறக் கொழும்பில் இருந்து வந்திருந்ததாக தெரிவித்த அவா வாக்குமூலம் ஒன்றைக் கொடுக்குமாறு கேட்டதாகவும் அதனை வழங்கியதையடுத்து தன்னை விடுவித்து விட்டதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவரது உரையொன்று தொடர்பில் விசாரணைக்கு கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments