விடுதலைப்புலிகள் உருவாக்கிய காடுகள் அழிப்பு


பழையமுறுகண்டி , தேராவில் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டில் பேணப்பட்டு வந்த தேக்கம் காடுகள் வகை தொகை இன்றி அறுத்து தென்னிலங்கை மற்றும் யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றபோதும் அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னிப் பிரதேசம் முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மற்றும் பழையமுறுகண்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் தேக்கம் மரங்கள் நாட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது.  அவ்வாறு பராமரிக்கப்பட்ட வனப்பகுதிகள் போரின் பின்னர் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளது. இவ்வாறு வனவளப்பகுதியின் ஆளுகையில் உள்ள பிரதேசத்தில் பொது மக்கள் அத்தியாவசிய தேவைகருதியும் ஒரு மரம் தறிக்கப்பட்டாலும் குறித்த திணைக்களம் கைது செய்யப்படுவதோடு குறித்த வனப் பகுதிகளில் கால்நடைகள் மேச்சலிற்குச் செல்லவும் வனவளத் திணைக்களத்தினர் தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி பகுதிகளில் 1997 முதல் 200ம் ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பராமரித்த தேக்கம் மரங்கள் மறிக்கப்பட்டு பாரிய மரங்கள் நடுவே மறைத்தும் சிறு மரங்கள் வெளித் தெரியும் வண்ணமும் கடந்த இரு நாட்களாக பகல்வேளையில் தென்னிலங்கை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது. இவ்வாறு மரங்கள் எடுத்துச் செல்லப்படுவது தொடர்பில் எந்த திணைக்களமோ அல்லது பொலிசாரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது , தேராவில் பகுதியில் நீண்டகாலமாக முற்றிய மரங்களை அகற்றி மீள் சுழர்ச்சியில் மரம் நாட்டில் திட்டத்தின் கீழ் மரகூட்டுத் தாபனத்திற்கு அவை வழங்கப்பட்டன.

இதன் அடிப்படையில் அங்கிருந்து மரங்கள் அகற்றப்படுகின்றன. இப் பகுதியில் இன்னமும் சுமார் 20 மரங்கள் அகற்றப்படவேண்டியுள்ளது. இவை நெடுங்கேணி ஊடாக வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இதேநேரம் பழைய முறுகண்டி , ஒலுமடுப் பகுதியில் இருந்து மரம் தறிப்பதற்கோ அவை யாழ்ப்பாணம் எடுத்துச் செல்வதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனப் பதிலளித்தனர்.

No comments