கூட்டமைப்பு கசக்கின்றதென்கிறார் டக்ளஸ்!


வடக்கில் கூட்டமைப்புடனான உறவு கசப்பதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார். நமக்கு பிரதேச சபைகளை மக்கள் பொறுப்பளித்திருப்பார்களாக இருந்தால் பல மடங்கு மக்களின் தேவைகளைத் தீர்க்க முடிந்திருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் ஆட்சியின் தன்மை தொடர்பான விவாதத்தில் ஒற்றையாட்சியை வலியுறுத்தியதாக சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். அந்தக் கூட்டத்தில் நான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையே வலியுறுத்தினேன்.  ஒற்றையாட்சியை. ஒருமித்த நாடு என்று வார்த்தை ஜாலங்களால் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்.

புதிய அரசியலமைப்பில் என்ன உள்ளடக்கம் இருக்கின்றது என்ற உண்மையைச் சொல்லுங்கள் என்று வலியுறுத்தினேன். சிங்களத்தில் ஒன்றையும் தமிழில் வேறொன்றையும் கூறாதீர்கள் என்று கூறினேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை பலியிட்டவர்கள். தமிழ் மக்களின் அவலங்களுக்கு காரணமானவர்கள். தேர்தல்களின் போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தவர்கள்.

இப்போது தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக கூறிக்கொண்டு வார்த்தை ஜாலங்காளை முன்வைத்து தமிழ் மக்களுக்கு நிரந்தரத் துரோகம் செய்கின்றார்கள் என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற ஈபிடிபி கூட்டமைப்பிற்கு ஈபிடிபி உதவியிருந்தது.தற்போதும் முன்னணி வசம் உள்ளுராட்சி மன்றங்கள் செல்லாதிருக்க ஈபிடிபி முண்டு கொடுத்தே வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் வடமாகாண முதலமைச்சர் கனவில் வடக்கு திரும்பும் டக்ளஸ் கூட்டமைப்பிற்கு எதிரான கோசங்களுடன் தமிழ் மக்களின் வாக்கு அறுவடைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments