வடக்கில் மாவீரர் நாள் எழுச்சி - பொலிஸ் விடுமுறைகள் இரத்துவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த மாதம் மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையிலேயே பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நினைவு கூருவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments