பாதை தெளிவில்லை:காத்திருக்கின்ற தவராசா?



வடமாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைகின்ற நிலையில் முதலமைச்சர் தனது அடுத்த நிலைப்பாட்டை எடுத்து நாளை புதன்கிழமை அறிவிக்கவுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் தனது பாதை தொடர்பில் தெளிவற்று வீடு செல்கின்றார்.எனினும் தனது தாய்க்கட்சியுடன் இணைவது தொடர்பில் மீண்டும் அவர் சமிக்ஞையினை வெளிப்படுத்தியுள்ளார்.

என்னுடைய சுயாதீனமான செயற்பாடுகளாலேயே நான் இன்றைக்கு பலதைச் செய்திருக்கின்றேன். அதனாலேயே எனக்கும் தாய் கட்சியான ஈபிடிபிக்குமிடையே முரண்பாடுகளும் வந்திருக்கலாம். ஆகவே தொடர்ந்தும் சுயாதீனமாக அரசியலில் செயற்படுவதற்கு இடமிருந்தால் அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றேன். இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது தொடர்பிலே சிந்திக்க வேண்டியிருக்கின்றதென தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் அவர் பகிர்ந்துள்ளார்.

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியில் தான் நான் இது வரை இருக்கின்றேன். கட்சிக்குள் முரண்பாடு இருக்கலாம். அந்த முரண்பாடுகள் காரணமாக அவர்கள் என்னை கட்சியிலிருந்து நீக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் படி தான் கேட்டவர்களே ஒழிய என்னுடைய கட்சி நிலையிலிருந்து அல்லது உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இதுவரை கேட்கவில்லை. 

ஆதனால் நான் அக் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிக்கு ஆதரவாகவே அல்லது கூட்டுச் சேர்ந்தோ செயற்படவில்லை. நான் தனித்துவமாக இயங்கி தனித்துவதத்தைக் காப்பாற்றியிருக்கின்றேன். அத்தகைய செயற்பாடுகள் கட்சிக்கும் எனக்கும் இடையில் முரண்பாட்டைக் கொண்டு வந்திருக்கலாம்.

ஒரு கட்சி என்றால் அதன் வரம்புக்குள்தான் செயற்பட்டிருக்க முடியும்.; கட்சியின் வரம்பபை மீறி செயற்பட முடியாது. அவ்வாறு நான் ஒரு சுயாதீனமாகச் செயற்பட்டதால் தான் எனக்கென்று தனிப்பட்ட விடயத்தை ஏற்படுத்தியிருக்கின்றேன். ஆகவே என்னுடைய சுயாதீனத்தை விட்டுக் கொடுக்காமல் சுயாதீனமாகச் செயற்படலாம் என்றால் அதனையும் செய்ய தயார். விட்டு விலகவும் தயார்.

ஆனாலும் நான் சொன்னது போன்று என்னுடைய சுயாதினத்துடன் நான் செயற்படுவதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்தால் கட்சியுடன் சேர்ந்து செயற்படுவதா அல்லது ஒதுங்கிக் கொள்வதா என்பதை அந்த நேரம் அதனைப் பார்த்துக் கொள்ளுவோம் என்றார். அதற்காக புதிய கட்சிகளை ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் அழுத்தம் கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடவும் எண்ணியிருக்கின்றேனெனவும் தவராசா தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் தனது தாய்கட்சிக்கு விடுத்துள்ள அறிவிப்பிற்கான சமிக்ஞையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.

No comments