வடமாகணசபைக்கு கீதம் இறுதி அமர்வில் வெளியிட்டுவைக்கப்பட்டது! (காணொளி உள்ளே..)

வடமாகணசபைக் காலம் நேற்றுடன் முடிவடைந்த வேளை சபைக்கான கீதமும் முதலமைச்சரால் வெளியீட்டு வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் பெருமை, தகமை, அறிவு, எழில், பலம் போற்றும் விதமாக அமையப்பெற்ற இக் கீத்ததை முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளரும் கவிஞருமாகிய கலாபூஷணம் கீழ்க்கரவை கி. குலசேகரம் இயற்றியுள்ளார் ( இவர் முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி. சிவநேசனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
பாடலுக்கான இசையினை ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் வழங்கியுள்ளார், பல கலைஞர்களின் உழைப்பில் உருவான கீத்ததை முதலமைசர் வாழ்த்தி கௌரவப்படுத்தியுள்ளார்.

No comments