மடு மாதா ஆலயத்துக்குச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது! 8 பயணிகள் படுகாயம்!

கொழும்பு கொச்சிக்கடை பகுதியிலிருந்து மடு மாதா தேவாலயத்தை நோக்கிப் பயணித்த பேருந்து வவுனியா செட்டிகுளப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது.

வேககக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் பெரியகட்டு 40 ஆவது மைல்கல் அருகில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த எட்டு பேர் த படுகாயமடைந்தனர். அவர்கள் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments