மகனுடன் வந்தார் முதலமைச்சர்!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள் யாழ்.வந்துள்ளனர்.தனது அரசியல் பயணத்தில் குடும்பத்தை கலக்காதே முதலமைச்சர் பயணித்து வந்திருந்தார்.இந்நிலையில் சபைக்குரிய காலம் நாளை முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது.

இந்நிலையில் தந்தையுடன் பிறந்த நாளை கொண்டாக மகன் மற்றும் பேரக்குழந்தைகள் சகிதம் யாழ்.வந்துள்ளனர். 

வடமராட்சியின் பருத்தித்துறையில்; நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த மைதானத்திற்கு நிதி ஒதுக்கியதுடன் அந்நிகழ்வில் முதலமைச்சரை பங்குபற்ற வைக்க வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பாடுபட்டிருந்தார்.

அதேநேரம் கொழும்பிலிருந்து தனது பிறந்தநாளிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் நேற்றைய திறப்பு விழா நிகழ்விற்கு முதலமைச்சர் அழைத்து வந்துள்ளார்.

No comments