மீண்டும் ஜெனீவா சென்றுள்ள சரத் வீரசேகர?

வலிந்து காணாமல் ஆக்கபட்டுள்ளோரது குடும்பங்களிற்கான ஜெனீவா அனுமதியை மறுதலித்துள்ள இலங்கை அரசு  இலங்கை இராணுவத்தினர் யுத்தகுற்றம் செய்யவில்லை என வலியுறுத்துவதற்காக, ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று ஜெனீவா செல்ல அனுமதித்துள்ளது. நேற்று (18) குறித்த குழு ஜெனீவா பயணமாகியுள்ளது.

இந்நாட்டு இராணுவத்தினர் சார்பில் ஜெனீவாவில் நாளை  (20) உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதெனவும், இவ்வாறு 4 ஆவது தடவையாக உரையாற்ற போவதாகவும் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த அமர்வில் டுபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கையரை பிரதிநிதித்துவப்படும் குழுக்கள் இரண்டும் கலந்துகொண்டு இராணுவ தரப்பு நியாயங்களை எடுத்துரைக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments