மக்கள் குடிசைகளை அகற்றி சிவில் பாதுகாப்புப் படையினர்! பதற்ற நிலையில் சாந்தபுரம்

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தினரால் மக்களின் குடிசைகள் அகற்றப்பட்டதால் அங்கே பதற்ற நிலை தோன்றியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை நடந்துள்ளது.

அண்மையில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியேறியிருந்த நிலையில் அதில் தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தபுரம் பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதியை மீண்டும் கைப்பற்ற படையினர் முயன்று வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.



No comments