வாகனங்களிற்காக அலையும் வடக்கு பிரபலங்கள்!

தென் மாகாண ஆளுநருக்கு, 430 இலட்சம் ரூபாய் செலவில் வாகனமொன்றை  கொள்வனவு செய்வதற்காக, மாகாண சபையில் ஒதுக்கப்பட்ட நிதியை, அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை வடக்கில் புதிதாக முளைத்துள்ள உள்ளுராட்சி அரசியல் தலைவர்கள் தமக்கு சொகுசு வாகனங்கள் வேண்டுமென கோரியுள்ளனர்.

அவ்வகையில் யாழ்.மாநகரசபையின் முதல்வர் ஆனோல்ட்டிற்கு ஆறு கோடி ரூபாயில் சொகுசு கார் கொள்வனவு செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் பயணம் செய்ய சொகுசு வான் ஒன்றையும் கொள்வனவ செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கரவெட்டி பிரதேசசபையிலும் அவ்வாறு வாகனமொன்றை கொள்வனவு செய்ய தவிசாளர் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிதியை எவ்வாறு தரகு பணத்துடன் செலவு செய்வது என்பதே கணிசமானோரது நிலைப்பாடாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநரிற்கு தற்போது 17 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அது போதாதென கடந்த ஆண்டில் ஆறு கோ பெறுமதியில் வாகனமொன்றை வடமாகாண நிதியில் கொள்வனவு செய்த ஆளுநர் தற்போது மேலுமொரு வாகனத்தை கொள்வனவு செய்து தர அழுத்தங்களை அதிகாரிகள் மீது பிரயோகித்து வருவதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையிலேயே தென் மாகாண ஆளுநருக்கு, 430 இலட்சம் ரூபாய் செலவில் வாகனமொன்றை  கொள்வனவு செய்வதற்காக, மாகாண சபையில் ஒதுக்கப்பட்ட நிதியை, அவர் நிராகரித்துள்ளதுடன் குறித்த நிதியை, அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாண செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட குறித்த நிதியை,  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும், விசேட வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற எண்ணியுள்ளதாக, அளுநர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளாராம்.

No comments