தீலிபன் பெயரை உச்சரிக்கவும் தகுதியில்லா ஈனர்களே!! இனியேனும் திருந்துங்கள் - ஆதித்தன்

விடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ உருவாகுவதில்லை, அது ஆத்மாத்தமாக இயல்பாகவே உருவாகவேண்டும். அதுவே உன்மையான உணர்வாகும் அவ்வாறான எத்தனையோ உணர்வாளர்கள் உத்தமர்கள் இந்த மண்ணுக்கும் இந்த தமிழினத்துக்கும் தம்மையே அர்ப்பணித்துச்சென்றார்கள் அர்பணிப்பு தியாகம் என்ற சொல்லுக்கே அடையாளச்சின்னங்களாய் இன்றுவரைக்கும் எம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அப்படியான ஒரு உன்னதமான தியாகி தான் தியாக தீபம் திலீபன் அவர்கள்!!

ஒரு மெழுகுவர்த்தி தன்னையே உருக்கி எவ்வாறு பிறருக்கு வெளிச்சத்தைக்கொடுக்கின்றதோ அதே போல ஒருசிலரது தியாகம் என்பது  ஒரு சமூகத்திற்கே விடிவைப்பெற்றுக்கொடுக்கின்றது அன்று இயேசுநாதர் சுமந்த சிலுவையும் கல்வாரி மலையிலே அவர் சிந்திய உதிரமும் எவ்வாறு இந்த உலகிற்கு விடியலைப்பெற்றுக்கொடுத்ததோ அதேபோல ஈழத்திருநாட்டிலே எத்தனையோ போராளிகள் மாவீரர்கள் உதிரம் சிந்தி உயிர்த்தியாகம் செய்து வீர மரணம் அடைந்துள்ளார்கள்.

ஒரு வீரனின் தியாகம் ஈகம் என்றுமே போற்றப்படவேண்டும் அந்த வகையிலே இந்த புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஏன் உலகவரலாற்றிலே மிகவும் முக்கியமான ஓர் நாள்  ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகள் என்றும் கலகக்காரர்கள் என்றும் சர்வதேசம் எங்கிலும் தமிழர்களது இனவிடுதலைப்போராட்டத்தின் மீது சிங்களப்பேரினவாதிகளால் பூசப்பட்ட கறை தீலீபன் என்ற ஒரு உன்னதமான மனிதனால்  நல்லூர் வீதியிலே தகர்த்தெறியப்பட்ட ஒர் உன்னதமான நாள் !!


1987ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15ம் நாள் காலை 9மணிக்கு அகிம்சையின் ஆசானாய் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கும் இந்திய தேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து  தியாக தீபம் திலீபன் அவர்கள் அசிம்சைவழியில் தனது போராட்டத்தை ஆரம்பித்தார் காந்தியின் தேசம் என்றும் அகிம்சையின் ஆசான் என்றும் பெருமித்துக்கொள்ளும் இந்தியா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் தனது அகிம்சைரீதியான போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் என்று மரணிக்கும்வரை தளராத நம்பிக்கையோடு போராடிய திலீபனை பட்டினித்தீயிலே எரியவிட்டு வேடிக்கைபார்த்தது இந்தியதேசம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் தான்.

2009 அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் ஒரு தலைமையின் கீழே தமிழர்கள் வாழ்ந்த காலங்களில் எல்லாம் தியாகிகள் தியாகிகளாக பூசிக்கும் இடங்களிலும் துரோகிகள் எங்கோ தூர தேசங்களிலும் வகைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் 2009இற்கு பின்னர்  உயிர்விலைகொடுத்தவன் நரபலி எடுத்தவன் என வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே வரரிசையிலே வியாபார அரசியலுக்காய் சில விபச்சார அரசியல்வாதிகளால் அட்டவனைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
(ஆண்டியும் போக மடமும் குலைந்த) கதையாய் தலைவன் இல்லாத தேசத்திலே ஒரு சில தறுதலைகள் செய்யும் இழிவான செய்ற்பாடுகள் கொஞ்சம் அல்ல.

15-9-2018 அன்று தியாக தீபம் திலீபனது 31வது நினைவுநாள் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கே ஏற்பட்ட குழப்பம் மிக மிக கேவலமான ஒரு விடையம்

இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் பகிரங்கமாக தீலிபனிண்டம் மண்டியிட்டு மன்னிப்புக்கோருவார்களா? எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எங்கள் இனம் வாழவேண்டும். என்று வாழ்வைத்தொலைத்த போராளிகள்!! தமிழினத்தின் இன்னல் தீர்க்க என மின்னல்போல் போராடி அங்கவீனர்களாய்ப்போனவர்கள் தேசம் விடியவேண்டும்
என்ற ஆசையோடு புறப்பட்டு விடிவே இல்லாத சிறைகளின் வாடுகின்றவ்ர்கள் என அனைவரும் ஆதரவின்றிக்கிடக்கின்றனர்.

ஆனால் இங்கே துயிலும் இல்லங்களுக்கும் தூபிகளுக்கும் முன்னே தீபமிட்டு விள்க்கேற்றவும் ஒலிவாங்கிகள் முன்னே தம்மை இந்த இனத்தின் மீட்பர்களாய் ஒப்பனை செய்யவும் எத்தனை  போட்டிகள்.

பொய்யும் புரளியும் பித்தலாட்டமும் என அனைத்தையும் அப்பழுக்கின்றி செய்துவிட்டு அப்பனே சிவனே என்று நீறணிந்து கொள்வதைப்போல் தேசியத்துக்கு விரோதமான செயற்பாடுகளை சற்றும் கூச்சமின்றி செய்துவிட்டு  மாவீரர்கள் துயிலும் இல்லங்களுக்கும் நினைவுத்தூபிகளுக்கும் முன்னே தீபம் இட்டு விளக்கேற்றி வியாபார அரசியலுக்காய் அடிபட்டுக்கொள்ளூம் ஒரு இழிவான நிலையில் இன்று தமிழ் அரசியலும் அரசியல்வாதிகளும்.

அரசியல்வாதிகளே!! அறிவாளிகளே சற்று சிந்திப்பீர்!!

உன்மையிலே விளக்கேற்றி அறிக்கைகள் விடுவதால் விடுதலை கிடைத்துவிடுமா? ஏதோ துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவதும் அங்கே  கூட்டங்களை கூட்டி கூடி நின்று அழுவதும் தான் எங்களது உரிமையா ??

நீங்கள் ஒன்றாக திரண்டு நின்று ஒரு விளக்கினை ஏற்றிவிட்டு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதால் சிங்களதேசத்தின் ஆட்சி கவிழ்ந்துவிடப்போவது இல்லை. அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை மாறாக அவர்கள்
சர்வதேசமட்டத்திலே நீங்கள் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கின்ற அந்த நிகழ்வுகளைக்காட்டி தமிழர்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துவிட்டதாகவும் அவர்களுக்கான
உரிமைகளை தாம் கொடுத்துள்ளதாகவும் தன்னை புனிதப்படுத்தி சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் கெட்டித்தனமா? நகர்வுகளையே சிங்களதேசம் முன்னெடுக்கும்!! ஒப்பாரி வைப்பது ஓலமிடுவதும் தான் உங்கள் உரிமையா? நீங்கள் ஒரு விளக்கேறி விண்ணதிர ஆர்ப்பரிப்பீர் என்றா இத்தனை ஆயிரம் போராளிகள் வீர மரணம் அடைந்தார்கள்.

தமிழ்த்தேசியத்தையும் தமிழீழப்போராட்டத்தையும் ஒட்டுமொத்தமாக விலைபேசி விற்றுவிட்டு ஏன் இந்த போலி வேடங்கள் அரசியல் வாதிகளே,  நீங்கள் உன்மையிலே தமிழ்த்தேசியத்தை நேசிக்கின்றவர்கள் மாவீரர்களை மதிக்கின்றவர்களாக இருந்தால் இன்றொரு சபதமெடுப்பீர்!!! மாவீரர்களே!! உங்கள் கனவுகளுக்கு
உயிர்கொடுத்து ஈழத்தில் நடைபெற்றது ஒரு இனவழிப்பே என்ற உன்மையினை வெளிப்படுத்தி குற்றவாளிகளை அநீதியாளர்களை நீதியின் முன்னே நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த பின்னர் உங்கள் கல்லறைகளுக்கு வருவோம் ஒரு தீபமேற்றி வணங்குவோம் என்றெரு சபதமெடுப்பீர்.

தீலீபனது நினைவாலயத்தின் முன்னே தர்க்கம் செய்த அனைவரும் சித்திப்பீர் திலீபன் பன்னிரண்டு நாட்கள் பசியிருந்து போராடியபோது அவனோடு எங்களில் எத்தனை பேர் உடன் இருந்தோம்  திலீபன் பட்டினியில் வெந்து சாகும்போது வேடிக்கையாளர்களாய் அனுதாபிகளாய் கைகட்டி நின்றவர்கள் இன்று அந்த இடத்தில் நின்று அடித்துக்கொள்வதும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும் முறையாகுமா  இன்று திலீபன் வீரமரணம் அடைந்து 31 ஆண்டுகள்
ஆனால் அன்று அவன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில் ஒன்றையேனும் எங்களால் நிறைவேற்றமுடிந்ததா? இல்லை.

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றான்.

அகலக்கால் பரப்பி வந்துகொண்டிருக்கின்றது சிங்கள ஆக்கிரமிப்புப்பூதம் அடித்து விரட்டினோமா இல்லையே!!


2) சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அரசியல் கைதிகள் பற்றிய பேச்சையே மறந்துபோயல்லவா மல்லுக்கு நிக்கின்றோம் ஒரே வீட்டுக்குள்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

அது முழுமையாக நீக்கப்பவே இல்லை அதைப்பற்றிய பேச்சும் இல்லை

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

இப்படியொரு கோரிக்கை இருப்பதை மறந்தே போனோம்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

தமிழர்களே புதிது புதிதாய் பொலிஸ் சேவைகளில் இணைக்கப்படுவதால் அதைப்பற்றி சிந்திக்கவே நேரமில்லை ஆக மொத்தம் 31 வருடங்களாய் ஒரு தியாகியது ஒரு உன்னதமான வீரனது ஒரு கோரிக்கையினைக்கூட நிறைவேற்ற வக்கற்ற வாய்மையற்ற நாங்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவல்ல தீலீபன் என்ற பெயரை உச்சரிக்கவும் தகுதியற்றவர்கள் ஈனர்களே இனியேனும் அடித்துக்கொள்ளாதீர் ஆக்கிரமிப்பாளன் ஆனந்தம் கொள்கின்றான்.

#Thileepan #Nallur #Tamil 

No comments