டென்மார்க் பாராளுமன்றத்தில், தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் இராசதந்திரச் சந்திப்பு!

03.9.18 அன்று டென்மார்க் நாட்டின் பாராளுமன்றத்தில் டெனிஸ் அரசியல் கட்சிகளுடனான மற்றும் இராசதந்திர சந்திப்புகளும் இடம் பெற்றன. 



அதில் இப்போதைய தமிழர் தாயக,அரசியல் நிலைப்பாடு பற்றி அதிக கரிசனையை டெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்டியதாக சந்திப்பில் ஈடுபட்ட பிரதிநிதிகள் கூறியுள்ளார்கள். குறிப்பாக தமிழர் தாயக நிலப்பரப்பில் தற்போது சிறிலங்காவின் நல்லாட்சி அரசின் நேரடி ,மற்றும் மறைமுக ஆதரவுடனான மகாவலி நீர்ப்பாசன திட்ட நில அபகரிப்பு , வடகிழக்கு கரையோர தமிழர் மீனவர்கள் மீதான சிங்கள மீனவர்களின் அத்து மீறல், சிறிலங்காப் படைகளின் தமிழர் தேச நில ஆக்கிரமிப்பு மற்றும் அதன் ஊடான படைகளின் பொருளாதார மேலாண்மைச் செயற்பாடுகள் என்பனவும் , மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் ,போதைப்பொருள் வன்கொடுமைகள் கலாச்சார அத்துமீறல்கள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற டெனிஸ் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் , முக்கிய விடயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்கள் மீது சர்வதேசம்அழுத்தங்களை சிறிலங்கா அரசிற்கு கொடுக்க வேண்டும் என்பனவும் இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் அழுத்தமாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments