தலைமையை மாற்றுங்கள் கூட்டமைப்பில் போட்டியிடுகிறேன் - விக்கி நிபந்தனை


“வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக்கூற என்னால் முடிந்தவற்றை செய்வேன். தற்போதைய தலைமைகள் போய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“வடக்கு மாகாண சபையின் ஒரு சில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளைக் காட்டி அறநிலை மறந்த அவையினர் சிலரே காரணம். அவ்வாறு இருந்தும் எமது செயற்பாடுகள் செவ்வனே இருந்தன. வடக்கு மாகாண சபையில் எமது சாதனைகள் பற்றிய கைநூல் விரைவில் வெளிவரும். அதை வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் எப்பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து எனது தெரிவுகள் குறித்துப் பேச்சு நடத்த ஆயத்தமாக்கவுள்ளேன். அவருடன் எனக்குப் பிணக்கு எதுவும் இல்லை. அவரின் வலது கரம் இடமளித்தால் அவரும் என்னைச் சந்திப்பதில் அவருக்கு எந்தத் தடங்கலும் இருக்காது என்று நம்புகின்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்தியாவுடனான எனது உறவுகள் என்றுமே நன்றாகவே இருந்து வருகின்றன. அதில் கட்டி எழுப்ப எதுவும் இல்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments