யாழ் மாவட்டச் செயலகத்தில் தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடி




யாழ் மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது.

மாவட்டச் செயலகங்களில் தினமும் தேசியக்கொடி ஏற்றப்படுவது வழமையான செயற்பாடு. அரச அதிபர் அல்லது அவர் இல்லாத சந்தர்ப்பங்களில் நிர்வாக உத்தியோகத்தரோ அல்லது மேலதிக அரசாங்க அதிபரோ தேசியக் கொடியினை ஏற்றுவர்.

அவ்வாறே கடந்தவாரம் யாழ் மாவட்டச் செயலகத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி தலைகீழாக பறந்துகொண்டிருந்ததை அவதானிக்கப்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறித்த தினத்தன்று மாவட்டச் செயலகங்கள் பிரதேச செயலகங்களுக்கிடையிலான வினைத்திறனைப் பரிசோதிக்கும் குழுவினர் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் யாழ் மாவட்டச் செயலகத்தை சுற்றிப் பார்த்தபோதே தேசியக்கொடி தலைகீழாக பறந்துகொண்டிருந்ததாகக் கூறி சர்ச்சைகளை உருவாக்கியுள்ளனர்.

அன்றைய தினத்தில் தேசியக்கொடியினை நிர்வாக உத்தியோகத்தரே ஏற்றியிருந்ததாகக் கூறப்படுகின்றது. குறித்த அதிகாரிகள் அவரிடம் கடிந்துகொண்டாக கூறப்படுகின்றது.

எனினும் யாழ் மாவட்டச் செயகத்திற்கு வழங்கப்படுகின்ற புள்ளிகளைக் குறைப்பதற்காககவும் மாவட்டச் செயலகத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காககவும் குறித்த அதிகாரிகள் வருகைதந்த தினத்தன்று சிலரால் திட்டமிடப்பட்டு நிர்வாக உத்தியேகத்தர் ஏற்றிய கொடி இறக்கப்பட்டு தலைகீழாக ஏற்றபட்டதா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments