படைமுகாம்களுடன்; பாடசாலை:விடுவிப்பென்கிறது தமிழரசு!


தமிழரசுக்கட்சியின் பெரும் பிரச்சாரங்களுடன் இன்று படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு கலைமகள் மகாவித்தியாலயத்தை சூழ படைமுகாம்களை பேண படைத்தரப்பு முடிவு செய்துள்ளது.இதனிடையே விடுவிக்கப்பட்ட பாடசாலை வளவில் ஏற்கனவே படையினர் நிறுவிய புத்தர் சிலை ஒன்று அப்படியே இருக்க விடப்பட்டுள்ளது.

மயிலிட்டி இறங்குதுறையிற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தந்திருந்த மைத்திரியிடம் மாவை விடுத்த வேண்டுகோளையடுத்து பாடசாலையை விடுவிக்க மைத்திரி அனுமதித்திருந்ததாக தமிழரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது.எனினும் இன்று அப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளநிலையில் வெறும்; பாடசாலை வளாகம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது,பாடசாலையினை சுற்றியுள்ள நிலப்பரப்பு மற்றும் அருகிலுள்ள இராணுவ முகாம்கள் எவையுமே இன்னும் அகற்றப்படவில்லை.

ஏற்கனவே நடேஸ்வராக்கல்லூரியை சூழ படைமுகாம்கள் உள்ள நிலையில் தற்போது விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு கலைமகள் மகாவித்தியாலயத்தை சூழ படைமுகாம்களை பேண படைத்தலைமை முற்பட்டுள்ளது.

படைமுகாம்களின் மத்தியில் மாணவர்கள் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments