காசுமேலே காசு வந்து கூட்டமைப்பிடம் கொட்டுகின்ற காலமிது?


ஈபிடிபி மற்றும் பெரும்பான்மையின கட்சிகளுடன் இணைந்து ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகள் தமது வருமானம் பார்க்கும் தொழிலில் மும்முரமாகியுள்ளன.அவ்வகையில் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆட்சேபனையினை தாண்டி காரைநகர் நுழைவாயிலில் கடலோரத்தில் மதுசாலையுடன் கூடிய நட்சத்திர விடுதிக்கு கூட்டமைப்பு சார்பு காரைநகர் பிரதேசசபை அனுமதி வழங்கியுள்ளது. 

மது அருந்தக்கூடிய வாய்ப்புள்ள நட்சத்திர விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகியால் உரிய காரணங்கள் காட்டி அனுமதி மறுக்கபட்டிருந்தது.

அருகாக மடத்துக்கரை முத்துமாரி அம்மன் வணக்கத்தலம் , காரைநகர் இந்துக் கல்லூரி பாடசாலை ஆகியன 500 மீற்றர் வலயத்தில் வருவதனை சுட்டிக் காட்டி அனுமதிக்கு சிபாரிசு செய்ய முடியாது என சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பில் எழுத்து மூலம் கட்டிட விண்ணப்பப் படிவத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களின் அடிப்படையில் தற்துணிவுடன் தவிசாளரால் அனுமதி வழங்கப்பட்டு தற்போது கட்டிட நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றன.

ஏற்கனவே வலி.வடக்கு பிரதேசசபை தலைவர் சோ.சுகிர்தன் காங்கேசன்துறையில் மதுபானச்சாலைக்கான அனுமதியை வழங்க ஒரு கோடி இலஞ்சம் கேட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் அதே போன்று பெருந்தொகை கைமாறலுடன் காரைநகரில் நட்சத்திரவிடுதி கட்டுமானம் தொடங்கியுள்ளது.

இதனிடையே காரைநகர் முகப்பில் நூற்றாண்டு கண்ட காரை சைவ மகா சபையின் செயற்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட சிவபெருமான் சிலை அமைக்கும் பணி நீண்ட கால இடைவெளியின் பின் மீண்டும் ஆரம்பமதாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments