கோத்தாவை தொடர்ந்து சரத்பொன்சேகாவும் சென்றார்?

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலமளித்துள்ளார்.

முன்னதாக ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்வதற்காக, அமைச்சர் பீல்ட் மார்சல் பொன்சேகா குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். 

கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக கடமையாற்றியவர் சரத் பொன்சேகா என்பதால், அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரிடம் ஏற்கெனவே வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், புதிதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அதற்கமையவே, இன்றைய தினம் சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு  அழைக்கப்பட்டுள்ளார்.

No comments