மன்னார்: தோண்ட தோண்ட வன்கூட்டுத்தொகுதிகள்?

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்பக்கூடுகள் அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வுசெய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இன்று மீண்டும் 72 ஆவது வது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அகழ்வு பணியின் போது கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்களாம் என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.
குறித்த மனித எலும்புக்கூடு அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய அகழ்வு பணியின் போதும் அதே போன்று கை கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய மூன்றுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வெளிவரும் மனித எச்சங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கொடூரமாக காணப்படுகின்றது.
மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு நிலையில் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் அகழ்வு பணிகளின்போதும் மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என தெரிகின்றது.
எனவே அகழ்வு பணிகளை விரைவு படுத்தும் வகையில் இன்றைய அகழ்வு பணியின் போது மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments