சிறீதரனை கைது செய்ய கோரிக்கை?


கிளிநொச்சியில் வரலாற்று தொன்மையான புரதான எச்சங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உடைத்துவிட்டதாகவும் அவரை தொல்லியல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறும் கோரி பிக்கு ஒருவர் கொழும்பு தலைமை காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

பொலனறுவை கால தொல்லியல் சின்னமென அடையாளப்படுத்த படையினருடன் இணைந்து புத்த பிக்கு ஒருவரால் 2009 இன் பின்னராக நிறுவப்பட்ட குறித்த சுவர் அண்மையில் கரைச்சி பிரதேசசபையால் இடித்தழிக்கப்பட்டிருந்தது.இடிப்பு பணிகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் இணைந்திருந்தார்.

கிளிநொச்சியில் தொல்லியல் அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் ஏதுமில்லையென தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் தற்போது வரலாற்று தொன்மையான புரதான எச்சங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உடைத்துவிட்டதாகவும் அவரை தொல்லியல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறும் கோருவது கேலிக்குரியதெனவும் சி.சிறீதரன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்களிடையே தனக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு இழப்பை சீர்செய்து அனுதாப அலையொன்றை தோற்றுவிக்க வேண்டுமென்றே இடித்தழிப்பில் ஈடுபட்டதாக போட்டி அரசியலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

துயிலுமில்லம் மதில் அமைப்பதில் என்ன நடந்ததோடு அவ்வாறே நடந்திருக்கிறது.இதன் மூலம் தனது சரிந்த மக்கள் செல்வாக்கை நிமிர்த்திவிடலாம் என்று அது நிறைவேறப்போவதில்லையெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

No comments