சிறிலங்கா ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி


அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு நேற்று ஒரு நாளில், 2.03 ரூபா வீழ்ச்சியடைந்து, 170.66 ரூபாவைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

சிறிலங்கா மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றில் விற்பனைப் பெறுமதி, 170.66 ரூபாவாகவும், கொள்வனவுப் பெறுமதி 166.78 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டிருந்தது.

இது நேற்று முன்தினம் இருந்த விற்பனைப் பெறுமதியை விட, 2.03 ரூபா அதிகமாகும்.

கடந்த ஓகஸ்ட் 8ஆம் நாளில் இருந்து, அமெரிக்க டொலருக்கு நிகரான, சிறிலங்காவின் நாணயப் பெறுமதி, 9.48 ரூபாவினால் வீ்ழ்ச்சியடைந்துள்ளது. இது, 5.88 வீத சரிவாகும்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 16.06 ரூபாவினால், ( 10.39 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.

No comments