வரலாற்றைத் திரிவுபடுத்தி பொய்கூறுவதுதான் பிக்குகளின் தொழில்


தற்போது போலியான வரலாற்றுத் தகவல்களைக் கூறி பௌத்த  பிக்குகளும், தொல்பொருள் திணைக்களத்தினரும் முல்லைத்தீவு  மாவட்டத்தில் பல குழப்பங்களை விளைவிப்பதாக வடமாகாணசபை  உறுப்பினர்  துரைராசா – ரவிகரன்  தெரிவித்துள்ளார்.

 குருந்தூர் மலை தொடர்பில் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ள  கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இவ்வாறான போலி வரலாற்றுச் சோடிப்புக்கள், கட்டமைத்து தமிழ்  இனத்தை அழிக்கும் செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

 கடந்த 04.09.2018 அன்று முல்லைத்தீவு – குருந்தூர் மலைப்  பகுதியில் பௌத்த பிக்குகள் தiமையிலான குழு ஒன்று, பௌத்த  சின்னங்களுடனும், கட்டுமானப் பணிக்கான பொருட்களுடனும்  வருகைதந்திருந்தனர்.
 இதை அறிந்த குமுழமுனைக் கிராம மக்கள் மற்றும் வடமாகாணசபை  உறுப்பினர் ரவிகரன்  உட்பட்ட அரசியல் பிரமுகர்கள்  பலரும் குறித்த இடத்திற்கு விரைந்திருந்தனர்.

 இவ்வாறு மக்கள் வருவதை அறிந்த பௌத்த பிக்குகள்  தலைமையிலான குழுவினர் தண்ணிமுறிப்பு – தண்டுவான் வீதியின்  ஊடாக ஓடியுள்ளனர். இவ்வாறு இவ்வாறு ஓடியவர்களை மக்கள் பிடித்து ஒட்டுசுட்டான்  காவற்றுறையினரிடம் கையளித்திருந்தனர்.

 மேலும் இரண்டு வாகனங்களில் வந்த இரண்டு பௌத்த பிக்குகள்  உட்பட்ட, பன்னிரெண்டு பேரையே மக்கள் இவ்வாறு பிடித்திருந்தனர்.  அத்துடன் இந்த இரு வாகனங்களிலும் சீமேந்து, சல்லிக் கற்கள்,  கட்டட நிர்மாணத்திற்கான பலகைகள், தள்ளு வண்டி, எரிவாயு  கொள்கலன்கள், மற்றும் பௌத்த சின்னங்களான புத்தர்சிலை, அந்த  சிலைக்குரிய கலசம் என்பன காணப்பட்டன.
 இதனையடுத்து ஒட்டுசுட்டான் காவற்றுறைப் பொறுப்பதிகாரி பௌத்த  பிக்குகள் தலைமையிலான குழுவினரிடம் வாக்குமூலத்தினைப் பெற்று  பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக மக்களிடம் உறுதியளித்திருந்தார்.

 இந் நிலையில் 06.08.2018 அன்று ஒட்டுசுட்டான் காவற்றுறையினர்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்னறத்தில் பௌத்த பிக்குகள்  தலைமையிலான குழுவினரை முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
 இதன்போது குருந்தூர் மலைப் பகுதிக்கு எவரும் செல்ல கூடாது. என  நீதிபதி அவர்கள் தற்காலிக உத்தரவொன்றையிட்டிருந்தார்.  இந்த வழக்கு மீண்டும் 13.09.2018 அன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

 இந்த வழக்கு சார்பாக நீதிமன்றத்தால். தொன்று தொட்டு வழிபாட்டில்  ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய  வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும்  இல்லையெனவும், குறித்த பகுதியினுள் புதிதான கட்டுமானம் மற்றும்  அகழ்வுப் பணி என்பன மேற்கொள்ளக்கூடாது. 
 மேலும் தொல்பொருள் ஆய்வு  ஆய்வு என்ற பெயரில் வேறு மதத்தினைச் சேர்ந்த கோவில்களை  அமைக்க முடியாது. அவ்வாறு அமைப்பதாகவிருந்தால்  காவற்றுறையில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத்தின்  அனுமதியுடனேயே மேற்கொள்ளமுடியும்.

 அதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் ஆய்வுகள்  மேற்கொள்வதாகவிருந்தால் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்  துறையினருடனும், மூத்த வரலாற்று ஆய்வாளர்களுடனும், குறித்த  கிராமத்தினைச் சேர்ந்த அனுபவம்வாய்ந்தவர்களுடனும்  மேற்கொள்ளப்படல் வேண்டும். 
 அந்த பகுதிக்கு சம்மந்தம்  இல்லாதவர்களான பௌத்த துறவிகள் வர முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருதை. என ஊடகங்கள் வாயிலாக  அறியமுடிந்தது. 

இந்நிலையில் கடந்த 27.09.2018 அன்று தொல்பொருட்  திணைக்களத்தின் சட்டவாளர்கள் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல்  செய்யப்பட்டு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 விசாரணைகளின் முடிவில் 01.10.2018 ஆம்  நாள்வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.  இதில் இரண்டு பௌத்த குருமார்கள் மற்றும் மூன்று  சட்டத்தரணிகளும் கருத்துத் தெரிவிக்கும் போது குருந்தூர் மலைப் பகுதியில் குருந்த அசோகராம என்னும் பௌத்த வழிபாட்டுத் தலம்  இருந்துள்ளது. எனவும், தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளவே  தாங்கள் அங்கு சென்றதாகவும், இதனை இங்குள்ள அரசியல்வாதிகள்,  குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டவர்கள்  மக்களைத் திரட்டி குழப்பத்தினை விளைவிப்பதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

 இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த ரவிகரன்  குழப்பங்களை ஒருபோதும் எமது மக்களோ நானோ ஏற்படுத்தவில்லை.  போலியான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து பௌத்த  பிக்குகளும், தொல்லியல் திணைக்களத்தினருமே பல குழப்பங்களை  விளைவிக்கின்றனர்.  குருந்தூர் மலை தமிழர்களின் பூர்விக பகுதியாகும். 

 அங்கு  அமைந்துள்ள ஐயன் கோவிலை அந்தப் பகுதி மக்கள் பூர்வீகமாக  வழிபட்டு வந்துள்ளனர். அந்த பகுதிகளில் காலங் காலமாக தமிழ்  மக்கள் வாழ்ந்துள்ளனர்.  இதற்கு அங்குள்ள சிதைவுகளும், எச்சங்களும், வரலாற்று ரீதியாக பறைசாற்றி நிற்கின்றன.

 பௌத்த ஆதிக்கத்தை தமிழர் பகுதிகளில் போலியான வரலாற்று ஆதாரங்களினை முன்வைத்து தமிழர்களின் தொன்மையான பகுதிகளை அபகரிக்கும் செயற்பாடாகவே இதனைப் பார்க்கின்றேன். என்றார்.

No comments