யாழில் ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்த தமிழக கல்வி அமைச்சர் !


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களின் விடுதலை தொடர்பில் எதுவும் கூற முடியாது என்று யாழ்.வந்த இந்திய தமிழக அரசின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (18) செவ்வாய்க்கிழமை வருகைதந்த இந்திய தமிழக அரசின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் யாழ்.பொது நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறிய அவரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதான 7 பேர் தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அது தொடர்பான நடவடிக்கை எந்த வகையில் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அவர்களின் விடுதலை தொடர்பில் என்னால் கருத்துக் கூற முடியாது. அது தொடர்பில் கருத்துக்களை கூறுவதற்கு அமைச்சரவையினால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் மட்டுமே இது தொடர்பில் கருத்துக்களையோ, அல்லது கேள்விகளுக்கான பதில்களையோ கூறுவார் என்று மழுப்பலாக பதிலளித்திருந்தார்.

No comments