பௌத்த பிக்குவின் முன்பள்ளியை திறந்த செங்கோட்டையான்?

யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்ட தமிழக அரசின் கல்விபள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பௌத்த பிக்குவொருவரால் கட்டப்பட்ட முன்பள்ளி கட்டடத்தையும் திறந்து வைத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கின் நெருங்கி சகவான பௌத்த பிக்கு ஒருவரால் வட்டுக்கோட்டையில் நிறுவப்பட்ட முன்பள்ளியை அரச அமைச்சரான இராதகிருஸ்ணன் சகிதம் திறந்து வைத்துள்ளார்.

இதனிடையே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களின் விடுதலை தொடர்பில் எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய் கிழமை வருகை தந்த இந்திய தமிழக அரசின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் யாழ்.பொது நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறிய அவரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதான 7 பேர் தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அது தொடர்பான நடவடிக்கை எந்த வகையில் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தனர். 

இது தொடர்பில் கருத்து வெளியட்ட செங்கோட்டையன் அவர்களின் விடுதலை தொடர்பில் என்னால் கருத்துக் கூற முடியாது. அது தொடர்பில் கருத்துக்களை கூறுவதற்கு அமைச்சரவையினால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமே இது தொடர்பில் கருத்துக்களையோ, அல்லது கேள்விகளுக்கான பதில்களையோ கூறுவார் என்று தப்பித்துக்கொண்டார்.

No comments