போராட களத்திற்கு மீண்டும் செல்வம்!

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை திரட்டி போராடப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதியளித்துள்ளார்.இன்று அனுராதபுரம் சிறைக்குச்சென்ற அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் அரசியல் கைதிகளை சந்தித்திருந்தார்.

தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தற்போது பத்துப்பேரும் தற்போது அனுராதபுர சிறையிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர்.

ஆவர்களில் ஜவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் தற்போது மருத்துவமனையிலிருந்து சிறை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அவர்களை சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கொழும்பில் பெருமெடுப்பிலான கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக உறுதி மொழி வழங்கியுள்ளார்.

இதனிடையே இன்று அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த அரசியல் கைதிகளது விடுதலைக்கான அமைப்பு பிரதிநிதிகளும் அரசியல் கைதிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். 

No comments