பாதுகாப்பு பிரதானியிடம் விரைவில் விசாரணை


பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விரைவில் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2008-09 காலப்பகுதியில் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடந்த 10ஆம் நாள், குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது.

அன்றைய நாள் அவரைக் கைது செய்யும் திட்டம் இருந்ததாகவும் கூறப்பட்டது.

எனினும், அவர் அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்னிலையாகாமல், அதிகாலையிலேயே மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். இதனால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தநிலையில் அட்மிரல் விஜேகுணரத்ன நேற்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு விரைவில், அழைப்பாணை விடுக்கும் என்று, காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

No comments