மீண்டும் 18ம் திகதி வருகைதர அழைப்பு?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் 18ம் திகதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, வடமாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விளக்கமளிப்பதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தார். 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வட மாகாண முன்னாள் மீன்படித்துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

No comments