நாயின் வேலையினை நாயே பார்க்கவேண்டும்?

வடக்கு மாகாண  ஆளுநர் மற்றும் நீதிமன்றம் பார்க்கவேண்டிய வேலையை மாகாண சபை அவைத் தலைவர் செய்வதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன். அதிகாரிகாரிகளுக்கு அவைத் தலைவர் எச்சரிக்கை விடுப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபையின் 132 ஆவதுஅமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில்  அவைத் தலைவர்  சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் போது மாகாணஅமைச்சர்கள் விவகாரம் சிக்கலில் இருப்பதால் அதிகாரிகள் அவதானமாகச் செயற்படவேண்டுமென்றும் இல்லையேல் பாரிய  பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென்றும் சிவஞானம் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இதன் போது கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்த சர்வேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்.

மாகாண அமைச்சர்கள் விவகாரம் தற்போது நீதிமன்றில் இருக்கின்றது. ஆகவே யார் யார் அமைச்சர்கள் என்றும் அந்த அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் ஆளுநர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால் ஆளுநர் அதனைச் செய்யவில்லை. ஆகவே ஆளுநரும் நீதிமன்றமும் பார்க்கின்ற வேலையை சபை பார்ப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கின்றது. அதிலும் மாகாணஅரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுவதும் தவறானது. சபையைஅவைத் தலைவசர் திசைமாற்றிக் கொண்டு செல்கின்றார் என்றார்.

இதன் போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கருத்து வெளியிடுகையில் அமைச்சர்கள் யார் தான் என்ற கேள்வி இருக்கின்றது. அகவே அமைச்சர்களுக்கான கொடுப்பனவை  நிறுத்தும்படி பிரதம செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன. ஆனால் தொடர்ந்தும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமைச்சர் விடயத்தில் ஆளுநர் செய்யவேண்டியதைச் செய்தும் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தும் தெரியப்படுத்த வேண்டியதை தெரியப்படுத்தியும் விட்டார். ஆனால் முதலமைச்சர் தான் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் தூங்கிவிட்டார் என்றார்.

இவற்றுக்கு அவைத் தலைவர் சிவஞானம் பதிலளிக்கையில் இந்தச் சபையை நீதிமன்றமாக மாற்றவில்லை. அவ்வாறு மாற்றப் போவதும் இல்லை. இந்தச் சபையில் சட்ட ரீதியானஅமைச்சர் சபை இல்லை என்று கூறுவதற்கு எனக்கு உரித்துண்டு. அதேபோன்றுஅமைச்சர்கள் விடயத்தில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களால் அதிகாரிகள் பசாதிக்கப்படாது அவதானமாகச் செயற்படவேண்டுமென்றே கூறினேன் என்றார்.

No comments